கொழும்பு - கண்டி பிரதான பாதையில் பஸ்யாலை என்னும் பிரதேசத்திற்கு அண்மையில் மரமுந்திரிகை வர்த்தகத்திற்குப் பிரசித்தி பெற்ற பட்டலீய என்னுமிடத்தில் இயற்கை அழகு மிகுந்த கிராமத்தில் இந்த தேசிய மாதிரி உருவமைப்பு நிலையம் அமைந்துள்ளது.
கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் மத்திய கலாசார நிதியத்தினால் இந்த நிலையம் நிர்வகிக்கப்படுகின்றது. புராதனமான, மிகவும் பழைமை வாய்ந்த சிலைகள், சிற்பங்கள், செதுக்கு வேலைப்பாடுகள், ஓவியங்கள் என்பவற்றின் மாதிரிகளைத் தயாரித்து வழங்குவதே இந்த நிலையத்தின் முக்கிய நோக்கமாகும். அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்த நிலையத்தில் தயாரிக்கப்படும் மாதிரி உருவமைப்புக்கள் தரத்திற் சிறந்தவையாகவும், பெறுமதி மிக்கதாகவும் உள்ளதென உறுதிப்படுத்தப்படுகின்றது.
நோக்கங்கள்
- சித்திரக் கலை, சிற்பக் கலை, சிலை செதுக்குதல் போன்ற விடயங்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்பட உள்ளது.இங்கு பொருட்களின் மாதிரி உருவமைப்புக்கள் தயாரிப்பதில் விசேட கவனம் செலுத்தப்படும்.
- சர்வதேச ரீதியாக மதிப்புக்கு உள்ளாகியிருக்கும் எமது வரலாற்றுப் பாரம்பரிய சம்பிரதாயங்கள் மற்றும் நற்பண்புகள் என்பவற்றைப் பிரதிபலிக்கும் மாதிரி உருவமைப்புக்களை வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கு வழங்குதல்.
- வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கு தரத்திற் சிறந்த மாதிரி உருவமைப்புக்களை விற்பனை செய்தல்.
- எமது புராதன சின்னங்களை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வதைத் தடுத்தல், புராதன சின்னங்களைச் சேகரிப்பவர்களுக்கு இந்த மாதிரி உருவமைப்புக்களை எமது விற்பனை நிலையங்கள் மூலம் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்குதல்.
- இவ்வாறான செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்குரிய வகையில் கலாச்சாரத் துறையில் வேலை வாய்ப்புக்களை வழங்குதல்.
- கலைப் படைப்புக்களில் திறமைசாலிகளான இளைஞர்களை ஊக்குவித்தல்.